Loading...
பண்டைய வரலாற்றில் கல்வி கேள்விகளுக்கும், கரையில்லா ஆன்மீக தொண்டர்களுக்கும், வான் முட்டும் கோபுரங்களுக்கும், ஈடில்லா புகழ்பெற்ற காஞ்சி மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதூர் வட்டத்தில் அமைந்திருக்கும் எறையூர் கிராமத்தில் ஆன்மீக அன்பர்களுக்கு நித்தமும் அருள்பாலிக்க எழிலுடனும் பொலிவுடன் எழுந்துள்ளது, அருள்மிகு இன்பாம்பிகை உடனுறை இருள் நீக்கீஸ்வரர் திருக்ககோயில். இதன் சிறப்பு என்னவெனில், இக்க கோயில் ஒரு குருதலமாகச் சீர்மை பெறுகிறது. அருள்மிகு தட்சிணாமூர்த்தி பகவான் கால் மாறி இருக்கும் 27 நட்சத்திரங்கள் உள்ளடங்கிய மரங்கள் சூழ, தவமூர்த்தியாக அருவுருவமாக சிவலிங்கமும் அமைந்துள்ள புனிதத்தலம் இது. இவ்வாலயத்தில் தலவிருட்சம் கடம்பமரம். அரிதினும் அரிதானது கடம்பமரம் உள்ள சிறப்பு இங்கே தான் பார்க்க இயலும். இத்திருக்ககோயிலைச் சுற்றி 1500 பனை மரங்களும், நீர்வளம் பெருக 500 நீர்மருது மரங்களும் நடப்பட்டு அவை தகுந்த முறையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இத்திருக்க கோவில் பக்தர்களின் சகல வேண்டுதல்களுக்கும் அருள் பாலிக்கும் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது. மேலும் படிக்க....
அருள்மிகு இன்பாம்பிகை உடனுறை இருள்நீக்கிசுவரர் சாரிட்டபிள் டிரஸ்ட் இயங்கிவரும் இடம் கோயம்பேடு. இந்த
டிரஸ்ட்டுடன் இணைந்து பல நல்ல காரியங்கள், மற்றும் கோவிலுக்கு தொண்டு செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த
டிரஸ்டுக்கு நீங்கள் டொனேட் செய்வதால் 80சி வரி விளக்கு பெறுவீர்கள். இந்த டிரஸ்ட் அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட டிரஸ்ட்.
Exemption u/s 80G is available for Donation to this trust vide approval Number
AAHTA2093AF20231 Dated 19-1-2023
மேலும் படிக்க....