You are using an outdated browser. For a faster, safer browsing experience, upgrade for free today.

Loading...

ஆன்மிக பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்‌

திருமூலர்‌ கோசாலையில்‌ கோபூசை சிறப்பாக நடைபெறுகிறது. கோபூசையின்‌ பலன்கள்‌ மனித வாழ்வில்‌ பல மாற்றங்களை நிகழ்த்தி இன்பமும்‌ ஏற்றமும்‌ தருகின்றன. பசுவை வணங்குவதால்‌ வாழ்வில்‌ அடையும்‌ பற்பல நன்மைகள்‌:

பசுவின்‌ உடலில்‌ முப்பது முக்கோடி தேவர்களும்‌, 4000 ரிஷிகளும்‌, அஷ்டவசுக்களும்‌, நவகிரகங்களும்‌ ஆட்சி செய்கின்றன.

பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால்‌ பல புராதன கோயில்களுக்குச்‌ சென்று வந்த பலன்‌ கிடைக்கும்‌.

விட்டில்‌ பசு வளர்ப்பது செல்வச்‌ செழிப்பை உண்டாக்கும்‌. பசுவை மாடு என்று அழைக்காமல்‌ பசுத்தாய்‌, கோமாதா என்று அழைத்தால்‌ சொர்க்கத்தில்‌ இடம் கிடைக்கும்‌.

ராமேசுவரத்தில்‌ காராம்‌பசுவைத்‌ தானம்‌ செய்தால்‌ ஆண்‌ வாரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு பசு முதல்‌ கன்று பிரசவித்ததும்‌ அதை 'தேனு' என்பார்கள்‌ இரண்டாவது கன்று பிரசவித்ததும்‌ அதற்கு “கோ” என்று அழைப்பார்கள்‌. எனவே, இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான்‌ கோபூசைக்கு பயன்படுத்துவார்கள்‌. கோபூசை செய்வதால்‌ கிடைக்கும்‌ உடனடி நன்மை என்ன தெரியுமா ?. பணக்கஷ்டம்‌ நீங்கும்‌.


நன்றாக பால்‌கறக்கும்‌ பசுக்களைக்‌ காசியில்‌ தானம்‌ செய்தால்‌, அவர்களின்‌ ஏழு தலைமுறை பலனடையும்‌.

உங்களால்‌ விட்டில்‌ உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால்‌, அதை அடி மாடாக விற்காமல்‌ ஏதாவது ஒரு கோசாலையில்‌ சேர்த்து விடுவது நல்லது. பசுக்கள்‌ இறந்தால்‌ அவற்றுக்கு உரிய முறையில்‌ இறுதிச்‌ சடங்குகள்‌ செய்யப்பட வேண்டும்‌.

திருவண்ணாமலை கிரிவலப்‌பாதையில்‌ நிறைய பேர்‌ பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கிக்‌ கொடுப்பதை பார்த்திருப்பீர்கள்‌. பசுக்களுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே பிறவிப்‌ பாவம்‌ விலகும்‌ என்பது ஐதீகம்‌.
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்‌ போன்ற நாட்களில்‌ பசு தானம்‌ செய்தால்‌ கூடுதல்‌ புண்ணியம்‌ கிடைக்கும்‌. நமக்கு வருவாய்‌ தர இயலாத நலிந்த பசுக்களை பராமரிக்கும்‌ பசு மடங்களிலும்‌, தொழுவங்களிலும்‌ சேர்ப்பிக்க உதவ வேண்டும்‌. பசுவையும்‌ கன்றயும்‌ யார்‌ ஒருவர்‌ நன்கு பராமரிப்பு செய்கிறாரோ அவரது 21 தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்‌. நம்‌ விட்டில்‌ பசு வளர்க்க வாய்ப்பு இல்லையெனில்‌ பசு வைத்திருப்பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும்‌.
கடுமையான நோயால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ கருப்பு நிற பசுவை தானம்‌ செய்தால்‌ பரிகாரம்‌ உண்டாகும்‌. சனீஸ்வரனுக்கு காராம்‌ பசு தானம்‌ செய்து கொடுப்பது நல்லது. சரிய பலம்‌ பெற விரும்புபவர்கள்‌ சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்‌. மரணப்‌ படுக்கையில்‌ இருக்கும்‌ ஒருவர்‌ அவரது பாவங்கள்‌ நீக்கிட நற்கதி அடைய பசு தானம்‌ செய்வதை நம்‌ முன்னோர்கள்‌ வழக்கமாக வைத்திருந்தனர்‌.
கோவில்களில்‌ விளக்கேற்றி பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில்‌ தானம்‌ செய்வதை ஆதித்தமிழர்கள்‌ வழக்கத்தில்‌ வைத்திருந்தனர்‌. பசு தானம்‌ அடிக்கடி செய்வது வம்சவிருத்தியை உறுதி செய்யும்‌ என்று தர்மசாஸ்திரம்‌ கூறுகிறது.

சிவசிவ